திருச்சியில் வருகிற 20-ந்தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

திருச்சியில் வருகிற 20-ந்தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்
X
திருச்சியில் வருகிற 20-ந்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.09.2022 செவ்வாய்க் கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் நேரில்ல் இரட்டை பிரதிகளில் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture