திருச்சியில் சாலையோரத்தில் கிடந்த 20 மூட்டை கடத்தல் ரேஷன் அரிசி

திருச்சியில் சாலையோரத்தில் கிடந்த 20 மூட்டை  கடத்தல் ரேஷன் அரிசி
X

திருச்சியில் சாலையோரம் அனாதையாக கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றி சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

திருச்சியில் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த 20 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியில் அரிசி மூட்டைகள் கிடப்பதாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரோட்டோரத்தில் கிடந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி அவை யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தினர். அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்த போது அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசார் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த 400 கிலோ எடையிலான 20 மூட்டைகள் ரேஷன் அரிசியை கைப்பற்றி, அந்த இடத்திற்கு கொண்டுவந்து போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future