திருச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது: போலீசார் அதிரடி

திருச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது: போலீசார் அதிரடி
X
பைல் படம்.
திருச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி பாரதி (வயது 53). இவர்கள் இருவரும் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள பசுமைப் பூங்காவில் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பாரதியின் கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து பாரதி எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் சேர்ந்த ஜெகஜீவன், ரத்தினவேல் ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!