கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை
X
கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வெங்கடேஷ்வரா ரைஸ்மில் அருகே நின்று கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கடந்த 2015-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மோர்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பவரை சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 396 எண்ணிக்கையில் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!