திருச்சி 2 தற்காலிக பஸ் நிலையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு

திருச்சி 2  தற்காலிக பஸ் நிலையங்களில் மாநகர போலீஸ்  கமிஷனர் ஆய்வு
X

திருச்சி தற்காலிக பஸ் நிலையங்களை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் 2 இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையங்களை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,திருச்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், திருச்சிமாநகரில் தஞ்சாவூர் மார்க்கம்,புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகியவழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்காக மன்னார்புரம் சர்வீஸ்ரோடு மற்றும் சோனா மீனாதியேட்டர் அருகே 2 தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று பார்வையிட்டார்.தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகர கமிஷனர் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்விதவாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி,ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி,ஏற்றக் கூடாது. வேன்கள், கார்கள் மற்றும்ஆட்டோக்களை அதற்கெனஒதுக்கப்பட்ட இடத்தில் தான்நிறுத்த வேண்டும்.போக்குவரத்துக்கு இடையூறாகவும்,சாலையோரங்களிலும் நிறுத்தக்கூடாது.

Tags

Next Story