திருச்சி:தீபாவளியையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கியது

திருச்சி:தீபாவளியையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கியது
X

திருச்சி மன்னார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையம்

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கியது.

தீபாவளிக்கு இன்று முதல் திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படதொடங்கியது. திருச்சி மன்னார்புரம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளதற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மற்றும் மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படும்.

அதேபோல சோனா மீனா தியேட்டர்அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள புதியதற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சை, நாகை, வேளாங்கண்ணிஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை, கோவை,கரூர் பஸ்கள் வழக்கம்போல மத்திய பஸ் நிலையம்வந்து செல்லும்.

மன்னார்புரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தை போலீஸ் உதவி கமிஷனர்கள் அஜய் தங்கம், முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்ட போக்குவரத்து துணைமேலாளர்கள் ஜூலியஸ் அற்புதராஜ்,சிங்காரவேலன், ரங்கராஜன், நகரகோட்ட மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிகளுக்காக கூடுதலாக 200 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
future of ai in retail