சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருச்சியில் சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஜூன் மாதம் பிரகாஷ் (வயது 22), பரத் (வயது 21) ஆகிய இருவரையும் கண்ட்ரோல்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரத் மீது 2021 ஆம் ஆண்டு சிறுமையை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு தான் எடுத்த வீடியோவை பரவ விட்டதாகவும் தெரியவந்தது. ஆதலால் இவர்கள் இருவரையும் எந்தவித விசாரணையும் இன்றி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இன்று சார்வு செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!