மோடி வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் ஜனவரி 1 மற்றும் இரண்டாம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வருகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி முதல்வர், ஸ்டாலின் மற்றும் கவர்னர் வருகையையொட்டி திருச்சியில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1-1- 2024 இரவு 10 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி கார்னர், டி.வி.எஸ். டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும். 2-1 - 2024 காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்து பேருந்துகளும் டி,வி,எஸ் ,டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு ,விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.
பாரதப் பிரதமர் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை தரும் கட்சி தொண்டர்களின் வாகனங்கள் 2 -1 -2024 காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu