தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம்
X
ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையங்களில் ஆதார் பதிவு 11, 25-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்திய தபால்துறை சார்பில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ஆதார் பதிவு தபால் நிலையங்களிலேயே செய்யப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தபால் கோட்டத்தில், ஸ்ரீரங்கம், துறையூர், பெரம்பலூர் தலைமை தபால் நிலையங்கள் உட்பட 33 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில், நாளை 11-ந்தேதி மற்றும் 25-ம்தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில், புதிதாக ஆதார் பதிவு, பழைய ஆதாரில் செல்போன் எண் மாற்றம் போன்ற திருத்தங்கள் உட்பட ஆதார் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் மேற்கொள்ளலாம். புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை, பழைய ஆதாரில் திருத்தங்கள் செய்ய வரி உட்பட ரூ.50-ம், பயோ மெட்ரிக் திருத்தங்கள் செய்ய வரி உட்பட ரூ.100 செலுத்த வேண்டும். பொதுமக்கள் தபால்துறையின் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை, ஸ்ரீரங்கம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!