திருச்சி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 19 மனுக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று (04.03.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 19 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
இந்த கோரிக்கை மனுக்களில் மாநகராட்சி பகுதிகளில் P.G.நகரில் தெரு மின்விளக்கு கேட்டும், J.K. நகர்பகுதில் மழை நீர் வடிகால் வசதி அமைத்து தரவும், T.S.N. அவன்யூ பகுதியில் சாலைவிரிவாக்கம் செய்து தரும்படியும் மேலும், பொதுமக்கள் வேலை , பாதாளசாக்கடை இணைப்பு, சாலையோரகடைகள் ஆக்கிரமிப்புகள், உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதாளசாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கவும், பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள்மீது உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அலுவலர்களுக்கு மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன் ,துணை மேயர் திவ்யா, நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத்தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணன் ஜெயநிர்மலா, துணைஆணையர் நாரயணன், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu