திருச்சி நகரில் சீராக மின்சாரம் கிடைக்க 18 புதிய மின் மாற்றிகள் திறப்பு

திருச்சி நகரில் சீராக மின்சாரம் கிடைக்க 18 புதிய மின் மாற்றிகள் திறப்பு
X

திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி நகரில் சீராக மின்சாரம் கிடைக்க 18 புதிய மின் மாற்றிகளை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரக்கொல்லை,மாதுளம், கொல்லைத் தெரு,நாச்சியார்கோயில், சீனிவாசநகர் பிரிவு அலுவலகம் பகுதி, திலகர்தெரு, 4-வது மெயின் ரோடு, திலகர்தெரு 5-வது மெயின் ரோடு, ரங்காநகர் மற்றும் கண்டோன்மெண்ட்பகுதி, பீமநகர் மற்றும் பொன்னகர் பிரிவு சேரன் சாலை, ஆகிய பகுதிகளில்அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது திருச்சி நகரில் சீராக மின்சாரம் கிடைக்க மின்சார துறை சார்பாக 18 புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வினியோகம் நகரப்பகுதிகளில் சீராக கிடைப்பதற்கு இந்த டிரான்ஸ் பார்மர்கள் உறுதுணையாக இருக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை அமைத்துக்கொடுத்திருக்கிறார். இந்த மேற்குதொகுதியில் உள்ள மக்களின் சார்பாக முதல்வருக்கும், மின்சார துறைஅமைச்சருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் தொகுதியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளாளர் வைரமணி,மாநகர செயலாளர் அன்பழகன், பழனியாண்டி,எம்.எல்.ஏ, உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture