திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ.21/2 லட்சம் கொள்ளை
திருச்சி தென்னூர் ரெஜி மெண்ட்டல் பஜார் பகுதியை சேர்ந்தவர் அக்பர்அலி. இவருடைய குடும்பத்தினர் வீட்டின் தரைதளம், முதல் தளம், 2-ம் தளத்தில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். அக்பர்அலிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கேரளாவுக்கு சிகிச்சைக்காக குடும்பத்துடன் சென்று இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை அக்பர் அலியின் மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு, தரைதளத்தில் இருந்த வீட்டில் 2 பவுன் நகை, ரூ.11/2 லட்சமும், முதல் தளத்தில் உள்ள வீட்டில் 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
மேலும், கொள்ளை யர்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக வீட்டில் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர். இது குறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்களும் வந்து விரல்ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து அக்பர்அலியின் மகன் முகமது இப்ராகிம் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu