திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுத்ததாக 17 வழக்குகள் பதிவு: கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுத்ததாக 17 வழக்குகள் பதிவு: கலெக்டர் தகவல்
X

சந்திரா மானிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுத்ததாக 17 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக வாக்களித்த பின்பு கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள சந்திரா மானிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை இன்று காலையில் பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வாக்குபதிவினை ஆய்வு நடத்த உள்ளோம். அனைத்து பகுதிகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.

பதட்டமான வாக்குசாவடிகள் 157 உள்ளது. அங்கு மைக்ரோ வெப் கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து காவல் துறையினர் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future