திருச்சியில் 1.650 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது

திருச்சியில் 1.650 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சுதாகர்

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 1.650 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது26). இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தின் குற்ற சரித்திர பதிவேட்டிலும் இவரது பெயர் உள்ளது.

இந்நிலையில் சுதகார் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து திருச்சி நகர தனிப்படை போலீசார் சுதாகரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு கிலோ 650 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுதாகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!