திருச்சி மாநகரில் காணாமல் போன 20 பேரில் 16 பேர் மீட்பு

திருச்சி மாநகரில் காணாமல் போன 20 பேரில் 16 பேர் மீட்பு
X
திருச்சி மாநகரில் காணாமல் போன 20 பேரில் 16 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.

திருச்சி மாநகரத்தில் இந்த மாதத்தில் காணாமல் போன 20 பேரில் 16 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவருகிறார்கள். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தூரைச் சேர்ந்த கிருத்திகா (வயது 28) என்பவர் தனது 2 குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் 3 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதேபோல் கடந்த 21-ந்தேதி அரியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரியமங்கலம் திடீர்நகரை சேர்ந்த 2-ம்வகுப்பு படிக்கும் சிறுவனும், 7-ம்வகுப்பு படிக்கும் சிறுமியும் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் இருவரையும் 24 மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து அவரது தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசாரை திருச்சி போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பாராட்டினார்.

Tags

Next Story