திருச்சியில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருச்சியில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
X

பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி.

திருச்சியில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்களை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைப்பு செய்தார்.

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போன 153 செல்போன்களை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைத்தார்.

திருச்சி நகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்களை தவறிவிட்டதாக திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இந்த புகார்கள் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உரிய விசாரணை நடத்தி அவற்றை கண்டுபிடிக்கும் படி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் கண்டோன்மெண்ட் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 69 செல்போன்களும், காந்தி மார்க்கெட் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 23 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 21 செல்போன்களும், கேகே நகர் சரக காவல் நிலைய எல்லையில் 11 செல்போன்களும் பொன்மலை சிறக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 11 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 10 செல்போன்களும் மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 3 செல்போன்கள் உட்பட மொத்தம் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளை 153 ஆண்ட்ராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட 153 செல்போன்களும் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து அதனை அதன் உரிமையாளர்களிடம் மாநகர காவல் ஆணையர் காமினி ஒப்படைத்தார். செல்போன்களை திரும்ப பெற்றுக் கொண்ட அதன் உரிமையாளர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செல்போன்களை கண்டுபிடித்து தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story