திருச்சி பாலக்கரை பகுதியில் 1.50 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் 1.50 கிலோ கஞ்சாவுடன்  5 பேர் கைது
X
திருச்சி பாலக்கரை காவல் நிலையம் (பைல் படம்)
திருச்சி பாலக்கரை பகுதியில் 1.50 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, கஞ்சா விற்ற 5 பேரை பிடித்து அவர்களிடமிருந்து 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.

தொடர்ந்து கஞ்சா விற்ற சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த சிராஜூதீன் (வயது 30),சம்பத்குமார் (வயது 40), ஹரிஹரன் (வயது 29), பொன்மலை ஆரோக்கியராஜ் (வயது 65), காஜாப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai future project