திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  இளைஞர் கைது
X
திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கீழபஞ்சப்பூரை சேர்ந்த 14 வயது மாணவியை நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் சிறுமி தானாகவே வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது செட்டியபட்டி மேலத்தெருவை சேர்ந்த அம்மாசி மகன் பரத் (வயது 20) என்பவரது வீட்டுக்கு சென்றதாகவும், கூலித்தொழிலாளியான அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி வந்த தகவலை அவரது பெற்றோர் போலீசில் தெரிவித்தனர். அப்போது போலீசார் சிறுமியிடம் விசாரித்த போது மேற்கண்ட தகவல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசுக்கு எடமலைப்பட்டி புதூர் போலீசார் மாற்றினர்.

பின்னர் கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!