திருச்சி மாநகரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் 12 பேர் திடீர் மாற்றம்

திருச்சி மாநகரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் 12 பேர் திடீர் மாற்றம்
X
தேர்தல் காரணமாக திருச்சி மாநகரில் 12 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகர காவல்துறையில் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு-

திருச்சி கோட்டை சட்டம், ஒழுங்கு எஸ்.ஐ. சிவசுப்பிரமணியன், சண்முகம் ஆகியோர் ஐ.எஸ்.க்கு பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

பி.டி.டி.எஸ்., எஸ்.ஐ.க்கள்., செல்வம், ராஜமாணிக்கம் ஆகியோர் கோட்டை சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

ஐ.எஸ்.சில்., பணிபுரிந்த ராஜேந்திரன் கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலைய எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் எஸ்.ஐ. மாதரசி ஸ்டெல்லா மேரி பி.டி.டி.எஸ். பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இதே போல கே.கே.நகர் குற்றப்பிரிவு எஸ்.ஐ., தாமோதரனும் பி.டி.டிஎஸ்.,க்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. அம்சவல்லி மற்றும் ஏ.வி.எஸ்., பிரிவு எஸ்.ஐ. ரமா ஆகியோர் தீவிர குற்றப்பிரிவு தனிப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., அன்னம்மாள் ரெனி சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

ஏ.எல்.எஸ்.ஜிசி எஸ்.ஐ. விஜயகுமார் கண்ட்ரோல் ரூமுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இந்த உத்தரவானது (நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி) தேர்தல் விதியின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare