திருச்சியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் 12 பேர் பணியிடமாற்றம்

திருச்சியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் 12 பேர் பணியிடமாற்றம்
X
திருச்சியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் 12 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகரில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுக்கள் உள்பட 12 பேர் போலீஸ் நிலைய பணிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதே போல ஒரே போலீஸ் நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு மேல் பணியில் இருந்த 12 பேர் நெடுஞ்சாலை ரோந்து வாகன பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் ஆயுதப்படையில் இருந்து 6 டிரைவர்கள் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஓட்ட நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!