திருச்சியில் நடந்த சோதனையில் 1,150 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல்
திருச்சியில் கலப்பட எண்ணெயை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி உறையூர் பகுதியில் ஒரு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை ஆய்வு செய்ததில் அங்கு கடலெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டு வழக்கு போடுவதற்காக இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 1150 லிட்டர் கலப்பட எண்ணெய்கள் பிணை பத்திரம் போடப்பட்டு அவர்களது வளாகத்திலேயே ஒரு அறையில் வைத்து சீல் செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில்,.. இதுபோன்று எண்ணெய் தயாரிப்பு மற்றும் மொத்தமாக பேக்கிங் செய்பவர்கள் கலப்படம் இல்லாத உணவு எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொதுமக்களும் தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் சந்தேகமோ கலப்படமோ கண்டறிந்தால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ், இப்ராஹிம் ஸ்டாலின், பாண்டி, வசந்தன் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனார்.
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu