திருச்சியில் டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் 113வது பிறந்த நாள் விழா
விழாவில் எச்எம்கேபி மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டிக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாய கூட்டமைப்பு (எச்.எம். கே.பி) சார்பில் சுதந்திரப் போராட்டத் தலைவரும் சமதர்ம தலைவருமான மறைந்த டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் உள்ள எச். எம் .கே. பி. அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ராம்மோகன், தேசிய துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக டாக்டர் ராம் மனோகர் லோசியா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் ஜான் கென்னடி, தலைமை நிலைய செயலாளர் கோவிந்தராஜ், மாநில துணைத்தலைவர் அழகேசன், கரூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் சாமிநாதன், கோவை மாவட்ட செயலாளர் ஜான் பாஷா பாவா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அறிவம்மா, கவிதா ,ரேவதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் பத்திரப்பதிவு எழுத்தாளர் சங்க மாநில செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு அரசு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசி பெயர் மாற்றம் செய்ய காரணமாக இருந்த டாக்டர் ராம் மனோகர் லோகியாவிற்கு நோக்கி சென்னையில் சிலை திறக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழாவில் திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu