திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நான்காம் அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முவதும் 2672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிக பட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1072 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 103 ஆக உயர்ந்து உள்ளது. ஆகவே கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!