திருச்சி: தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
கோப்பு படம்
இது தொடர்பாக, திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும், தங்கள் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலம் தாங்கள் பயிரிட்டுள்ள தோட்டக்கலை பயிர்களை, இ-அடங்கலில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வரும் காலங்களில் அதிக கனமழை கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்த வாழை, வெங்காயம், மரவள்ளி மற்றும் மிளகாய் (வற்றல்) போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு, பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22-ம் ஆண்டு ராபீ பருவத்திற்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்.
வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 -ந் தேதி வரையும், வெங்காய பயிருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மற்றும் மிளகாய் (வற்றல்) பயிருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு வெங்காய பயிருக்கு ரூ.1,978, வாழைக்கு ரூ.3,238, மரவள்ளி பயிருக்கு ரூ.1,528, மற்றும் மிளகாய் (வற்றல்) பயிருக்கு, ரூ.1,120-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu