துறையூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

துறையூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
X
போக்ஸோ சட்டத்தில் கைதான வாலிபர்.
துறையூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி பிள்ளையார் கோயில் தெரு கருப்பண்ணப்பிள்ளை மகன் தேவராஜ்(57). தனது தங்கை மகளான பெற்றோர்களை இழந்த 17 வயது பெண்ணை வளர்த்தார். இச்சிறுமியும், திருப்பத்தூர் மாவட்டம் சின்னக்குளிச்சியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தர்மலிங்கம்(22) என்ற இளைஞரும் முகநூல் வழியாக பழகி காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேவராஜ் தான் வளர்த்த தங்கையின் மகளை ஜூன் 7ம் தேதி முதல் காணவில்லை என துறையூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சிறுமியைத் தேடினர்.

செல்போன் எண் சிக்னல் மூலமாக சிறுமியின் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீஸார் தர்மலிங்கத்தையும், அவருடன் இருந்த சிறுமியையும் நேற்றிரவு துறையூர் அழைத்து வந்து விசாரித்தனர். இறுதியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தர்மலிங்கத்தை போலீஸார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!