துறையூர் அருகே பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்

துறையூர் அருகே பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்
X
துறையூர் அருகே ரோட்டோரம் கிடந்த பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நாகநல்லூரில் இருந்து முத்தையம்பாளையம் செல்லும் வழியில் 100 நாள் பணியாளர்கள் தங்களுக்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளம்பெண் ரோட்டோரத்தில் கீழே கிடந்த ஒரு பாட்டிலை எடுத்து உடைத்து திடீரென தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அவரை உடனடியாக 108ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சேலத்தை சேர்ந்த சஞ்சீவி-மூக்காயி தம்பதியினர் தனது மகளான சங்கீதா (வயது 21) என்பவருடன் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது உறவினர் (மாற்றுத்திறனாளிக்கு) திருமணம் செய்து வைக்க, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வைரிசெட்டிப்பளையம் வந்துள்ளனர். வந்த இடத்தில், சற்று மனநலம் பாதிப்புக்குள்ளான சங்கீதா, தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வேறு ஏதும் காரணம் உண்டா? சங்கீதா மனநலம் பாதிப்புக்கு உள்ளானவரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!