கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்க வேண்டும் : தெருத்தெருவாக தண்டோரா போட்டு அசத்தும் தலைமை ஆசிரியர்

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்க வேண்டும் : தெருத்தெருவாக தண்டோரா போட்டு  அசத்தும் தலைமை ஆசிரியர்
X

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்க வேண்டும் தலைமை ஆசிரியர் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தபோது எடுத்த படம்.

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடம் கற்க வேண்டும் என்று துறையூரில் பள்ளி தலைமையாசிரியர் தண்டோரா மூலம் விழிப்புணர்வு செய்து வருகிறார்.

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்க வேண்டும் - தெருத்தெருவாக தண்டோரா போட்டு அசத்தும் தலைமை ஆசிரியர் .

கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களுக்களாக கல்வி நிறுவனங்கள் எதுவும் செயல்படாத சூழ்நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முறையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசால் ஏற்படுத்தப்பட்ட கல்வி தொலைக்காட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துறையூர், வெங்கடாசலபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் என்பவர் மாணவர்களுக்கு தண்டோரா அடித்து கல்வி தொலைக்காட்சியை காணவும், அதற்கான நேரம் குறித்த அட்டவணையை துண்டு பிரசுரம் மூலம் கொடுத்து வருகிறார்.

தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்று வருகின்றனர். அதனை மேம்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் கல்வி தொலைக்காட்சியை காண தண்டோரா மூலம் அறிவுறுத்தும் நிகழ்வு அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேறபை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பெற்றோர்கள் மாணவர்களை கல்வி கற்க பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!