சிறுத்தையுடன் செல்ஃபி.. இருவர் படுகாயம்; பீதியில் பொதுமக்கள்

சிறுத்தையுடன் செல்ஃபி.. இருவர் படுகாயம்; பீதியில் பொதுமக்கள்
X

சிறுத்தை தாக்கி படுகாயமடைந்த  பெரியசாமி, ஹரிபாஸ்கர்.

துறையூர் அருகே குகையில் செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆங்கியம் கிராமம். இந்த கிராமத்தின் கடைசிப் பகுதியில் ஆங்கியம் கரடு என அழைக்கப்படும் காட்டுப் பகுதி உள்ளது.

இப்பகுதிகளில் வன விலங்குகளான சிறுத்தை , கரடி உள்ளிட்ட விலங்குகள் சுற்றித்திரிவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஹரி பாஸ்கரன் என்பவர் கரடு பகுதியில் செல்பி எடுப்பதற்காக சென்றுள்ளார். குகையின் முன்பு நின்று செல்பி எடுக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக குழிக்குள் இருந்த சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட விவசாயி துரைசாமி, ஹரிபாஸ்கரை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரையும் சிறுத்தை தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த ஹரி பாஸ்கரன் மற்றும் விவசாயி துரைசாமி ஆகிய இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தாத்தையங்கார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய ஆணையர்கள் மற்றும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்,வனத்துறையினர் மினிடோர் ஆட்டோ மூலம் ஒலி பெருக்கியில் அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிராமத்து இளைஞர் மற்றும் விவசாயி ஆகிய இருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு