துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
X
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று மதியம் தனது இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்கவே, எழுந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 36) என்பவர் அப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண் அவரை கீழே தள்ளி விட்டு வெளியே வந்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் மகேந்திரனை பிடித்து துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்