திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி துறையூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து தெற்கு ஒன்றிய கழகத்தில் வார்டு எண் 13 க்கு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கழக சார்பஈக போட்டியிட கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளரிடம் விருப்பமனு அளித்தனர்.

நிகழ்ச்சியில முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி,எம்.ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், நகர செயலாளர் ஜெயராமன், வடக்கு ஒன்றிய செயலாளர், சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் ராம் மோகன், மற்றும் அழகாபுரி செல்வராஜ், மாவட்ட கழக துணைச் செயலாளர் வேம்பு ரங்கராஜ், மைவிழி அன்பரசன், பூக்கடை சாமிநாதன் சொரத்தூர், ரமேஷ், சிவசாந்த் மனோ உள்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story