துறையூர் கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

துறையூர் கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

துறையூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு ​சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 ஊராட்சி தலைவர்கள், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 19 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ளவற்றில் துறையூர் ஊராட்சி ஒன்றியம் 13- வது வார்டும் ஒன்றாகும். இந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக அபிராமி சேகர் போட்டியிடுகிறார்.

22 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அபிராமி சேகர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிக்கும் பணியை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தொடங்கிவைத்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. இந்திரா காந்தி. மாவட்ட துணை செயலாளர் சின்னையன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஜெயராமன், வெங்கடேசன், ராம்மோகன், சேனை செல்வம், முத்துக்கருப்பன், ஆதாளி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் புல்லட்ஜான் உள்பட நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!