சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் துறையூர் புறநகர்ப் பகுதி

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் துறையூர் புறநகர்ப் பகுதி
X
காவல்துறையினர் புறநகர்ப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் ,துறையூர் நகராட்சிக்குட்பட்ட புறநகர்ப் பகுதிகளான ஆர்.ஆர் நகர், சாமிநாதன் நகர், பாவடி புதுக்காட்டுத் தெரு, அம்மாபட்டி ரோடு, கண்ணபிரான் காலனி, எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிகளவில் குடியிருப்புகள் பெருகி வருகிறது. ஒவ்வொரு பகுதி குடியிருப்பு வாசிகளும் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே நிற்பதற்கு கூட அச்சப்படும் வகையில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே ரோட்டிலும், முடிவடையாத வீட்டின் உட்புறங்களிலும் மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளை சத்தமாக பேசுவது , போதை வஸ்துக்களை கையாள்வது , ஆட்டோவில் பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.

தெருவிளக்குகள் இல்லாததாலும் ,குறிப்பாக பாவடி புதுக் காட்டுத் தெருவில் உள்ள , தற்போது பயன்பாட்டில் இல்லாத தனியார் செல்போன் டவரை சுற்றிலும்,கண்ட்ரோலர் ரூமில் உள்ள பொருட்களை அகற்றிவிட்டு அதற்குள் விபச்சாரம், மது அருந்துவது , போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் , அதனைத் தட்டிக் கேட்பவர்களைத் தரக்குறைவாக பேசி தாக்குவதாகவும்,மேலும் அவர்களின் வீட்டை மது பாட்டிலைக் கொண்டு தாக்குதல் நடத்துவதாகவும் , இந்தக் குற்றச் செயல்களை செய்வதுபெரும்பாலும் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தான் என்றும் , இதனாலேயே மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சமாக உள்ளதாகவும், அவசரத் தேவைகளுக்குக் கூட வெளியில் செல்ல முடியாத அவல நிலையில் வசித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் உடனடியாக காவல்துறையினர் புறநகர்ப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story