16 வருடங்களுக்கு பிறகு முழுமையாக நிரம்பியது துறையூர் பெரிய ஏரி

16 வருடங்களுக்கு பிறகு   முழுமையாக நிரம்பியது துறையூர் பெரிய ஏரி

துறையூர் பெரிய ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரி கனமழை காரணமாக 16 வருடங்களுக்கு பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியானது சுமார் 285 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு இந்த ஏரியானது முழு கொள்ளளவை தற்போது எட்டி உள்ளது. இதன் காரணமாக உபரிநீர் வழிந்தோடி வருகிறது. இதனை காண பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமாக கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.ஆனால் காவல்துறையினர் பேரிகார்டு அமைத்து பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.

மேலும் செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், சிக்கத்தம்பூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் ஊருக்குள் புகுந்ததால் அங்கு தீயணைப்புத் துறையினரும் ஊராட்சி தலைவர்களும் போர்க்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்றிட முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

துறையூர் சிவன் கோவில் தெருவில் மூர்த்தி என்பவர் வசிக்கும் வீட்டில் வெள்ளநீர் நுழைந்தது. இவர் திருமண நிகழ்ச்சிக்கு இசை மேளங்கள் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் மழை நீர் புகுந்ததால் இவருடைய தவில் தண்ணீரில் மிதந்தது. மேலும் இவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

Tags

Next Story