துறையூரில் குடிநீர்,சாலை வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

துறையூரில் குடிநீர்,சாலை வசதி கேட்டு பொதுமக்கள்  திடீர் சாலை மறியல்
X

துறையூர் ஆலமரம் பகுதி பொதுமக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம், துறையூரில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் ஆலமரம் பகுதியில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் ஒரு வழிப்பாதையில் ஆலமரத்தடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். முறையான குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதிகள் சரி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

மறியலில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் நகராட்சி சுகாதார அலுவலர் மூர்த்தி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரகவி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்