/* */

திருச்சி: பள்ளி மாணவனை தாலி கட்ட வைத்த ஆசிரியை போக்சோவில் கைது

திருச்சி: பள்ளி மாணவனை தாலி கட்ட வைத்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சி: பள்ளி மாணவனை தாலி கட்ட வைத்த ஆசிரியை போக்சோவில் கைது
X

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள சிக்கத்தம்பூரை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 25). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் அவரிடம் 11ஆம் வகுப்பு படித்த மாணவரும் இவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். இந்த நிலையில் இரண்டு பேரும் கடந்த 5 ஆம் தேதி திடீரென மாயமானார்கள்.

இதனை தொடர்ந்து மாணவனின் பெற்றோர் ஆசிரியை மீது சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடினார்கள். அவர்களது செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிடங்களை ஆய்வு செய்தபோது அவர்கள் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சிக்கு வந்து மாணவனையும் ஆசிரியையையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது துறையூரில் இருந்து கிளம்பி தஞ்சாவூர், திருவாரூர் என இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மைனர் வயதான மாணவனை கடத்தி சென்று தனக்கு தாலி கட்ட வைத்ததாக ஆசிரியை மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவன் 18 வயதிற்கு கீழ் உள்ளவர் என்பதால் அவரை திருச்சியில் ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 24 March 2022 4:47 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு