அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் நிறுவும் நிகழ்ச்சி; துறையூர் எம்எல்ஏ பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் நிறுவும் நிகழ்ச்சி; துறையூர் எம்எல்ஏ பங்கேற்பு
X

வட்டாட்சியரின் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை வட்டாட்சியரிடம் அளிக்கும் எம்எல்ஏ ஸ்டாலின் குமார்.

துறையூர் தாலுக்காவில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி படங்கள் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, அவரது படத்தை அரசு அலுவலகங்களில் இடம்பெறும் நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதன்படி, துறையூர் தாலுக்காவில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி படங்கள் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற தலைவரும், நகர செயலாளருமான மெடிக்கல் முரளி முன்னிலை வகித்தார். தாசில்தார் செல்வம் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் போது முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரது படங்கள் வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டு, அந்தப் படங்கள் வட்டாட்சியரின் அலுவலக அறைக்குள் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நகர துணை செயலாளர்கள் சுதாகர், பிரேம், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் , மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், இளைஞரணி கிட்டப்பா , முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அம்மன் சிவா, மனோகரன், ஒன்றிய பொருளாளர் சுப்ரமணி, தலைமைக் கழக பேச்சாளர் துரைபாண்டியன் மற்றும் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!