துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

துறையூரில் உள்ள ஒரு கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனை நடத்தினார்.

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் துறையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மொத்த வியாபார கடையில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் ஐந்து கிலோ எடையுள்ள அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் நொச்சியம் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடையின் உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு சீல் வைக்கப்படும் என மாவட்ட நியமன அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!