உப்பிலியபுரம் அருகே ஏரி ஆக்ரமிப்புகள் அகற்றம்

உப்பிலியபுரம் அருகே ஏரி ஆக்ரமிப்புகள் அகற்றம்
X

பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போலீசார்.

உப்பிலியபுரம் அடுத்துள்ள சோபனபுரத்தில் உள்ள திருவள்ளுவர் ஏரியில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தில் சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஏரி.

இந்த ஏரியின் நீர் ஒசரப்பள்ளி, காந்திபுரம், காஞ்சேரிமலைபுதூர், சோபனபுரம், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சோபனபுரத்தைக் சேர்ந்த சமூக ஆர்வலரான இளங்கோவன் என்பவர், சோபனபுரம் ஏரிக்கு முக்கிய நீர்வரத்துத் தடமான மண்மலை-காஞ்சேரி மலை வழியாக ஏரியை நீர் வந்தடையும் ஆற்றுப்பாதை ஆக்ரமிப்பில் உள்ளது.

இதனால் 5 கிராமங்களுக்கு விவசாய பாசனமின்றியும் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. எனவே, ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ஏரி ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன் பேரில், துறையூர் தாசில்தார் செல்வம், துணை தாசில்தார் கோவிந்தராஜி , பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் உப்பிலியபுரம் எஸ்எஸ் ஐ செந்தில்குமார் உள்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் திருவள்ளூர் ஏரிக்கு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் திருவள்ளுவர் ஏரியின் ஆக்ரமிப்புகளை அகற்றினர். இதில் சுமார் 4 ஏக்கர் நிலபரப்பளவு கையகப்படுத்தியுள்ளதாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!