தடையை மீறி புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது. இங்கு வார இறுதி நாட்களில், அரசின் தடை உத்தரவை மீறி, நூற்றுக்கணக்கானோர் வந்து குளித்துச் செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இருக்கும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து அடிவாரமான புளியஞ்சோலைக்கு மூலிகை கலந்த நீர் வருவதால், இந்த நீரில் குளிக்கும் போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடி 18 மற்றும் வார இறுதி நாட்களில் மக்கள் குடும்பத்தினருடன் வந்து குளித்து விட்டு, தான் கொண்டு வந்துள்ள உணவருந்தி செல்கின்றனர். தற்போது தமிழகமெங்கும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சுற்றுலாத் தளங்களுக்கு தற்போது வரை தடை நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) முதல் இன்று ஞாயிறு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தடை உத்தரவை மீறி புளியஞ்சோலையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் மாஸ்க் அணிந்தும் ,சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூ ட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
புளியஞ்சோலையில் உள்ளே நாட்டாமடுவில் உள்ள சறுக்குப்பாறையின் மேலே உட்கார்ந்து கொண்டு அபாயத்தை உணராமல் செல்ஃபி எடுத்தும் வருகின்றனர். கடந்த 17-ம் தேதி திருச்சி மாவட்ட எஸ்.பி, முசிரி டிஎஸ்பி , மற்றும் துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் ஆகியோர் புளியஞ்சோலைக்கு நேரடியாக பார்வையிட்டு, யாரையும் மறு உத்தரவு அரசிடமிருந்து வரும் வரை கற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது என கடுமையாக எச்சரித்து சென்றுள்ளனர்.
ஆனால், அதனையும் மீறி கூட்டமாக ,மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வந்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக புளியஞ்சோலையில் மறைவுப் பகுதிகளில் இளைஞர்கள் மது அருந்திக் கொண்டும் உள்ளனர்.
மேலும் புளியஞ்சோலை பகுதி பச்ச பெருமாள் பட்டி ஊராட்சி நீர்வாகத்தின் கீழ் வருகிறது. இங்கு இரு சக்கர . வாகனங்கள் ஆகியவற்றிற்கு அதிக கட்டணத்தை வசூல் செய்வதாக புகார்கள் வருகின்றன. இரு சக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்டவற்றிற்கு விடக் கூடிய டெண்டர் கடந்த 2 மாதத்திற்கு முன்பே முடிந்து விட்ட நிலையில், தற்போது ஏலம் விடாமலேயே வண்டிகளுக்கு, அனுமதி கட்டணத்தை பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu