குடிநீர்ப் பிரச்னைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

குடிநீர்ப் பிரச்னைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
X

அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் மற்றும் நகராட்சி ஆணையர்.

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு.

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வரும் 26ஆம் தேதி பத்து ரூபா இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் துறையூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பத்து ரூபாய் சங்கம், துறையூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கத்தினர் உடனடியாக தினசரி காவிரி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு மாதத்திற்குள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புக்கொண்டார். இதனால் 26ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பத்து ரூபா இயக்க மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் செல்லதுரை, துறையூர் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகி காமராஜ், ரோட்டரி ஆனந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் மேலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?