துறையூர் அருகே ஒக்கரை ஏரிக்கரையில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க கோரிக்கை

துறையூர் அருகே ஒக்கரை ஏரிக்கரையில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்க கோரிக்கை
X

மீண்டும் உடைப்பு ஏற்பட்ட ஒக்கரை ஏரி.

துறையூர் அருகே ஒக்கரை ஏரிக்கரையில் மீண்டும் விரிசலை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து உள்ள உப்பிலியபுரம் அருகே ஒக்கரை ஊராட்சியில் ஒக்கரை ஏரி உள்ளது. இது சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழையால் ஏரி முழுவதும் நீர் நிரம்பி தடுப்பணையை கடந்து செல்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தஏரி நிரம்பியதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரியின் கரையில் கடந்த மாதம் விரிசல் ஏற்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒக்கரை ஏரி கரையில் திடீர் விரிசல் ஏற்பட்டது. சுமார் 30 அடி நீளத்திற்கு இந்த விரிசல் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!