துறையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: சிறுவன் சாவு

துறையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: சிறுவன் சாவு
X

பைல் படம்.

துறையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், அடைக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 32). லாரி டிரைவர். இவரது மனைவி பிருந்தா. இவர்களது மகன் புகழ் ஹர்சன் (2½). கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிருந்தாவுக்கு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக குழந்தை பிறந்தது.

முதல் மகன் புகழ்ஹர்சனை பராமரிக்க முடியாததால் கீழப்பட்டியில் உள்ள தனது அக்கா சாந்தி வீட்டில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜசேகரன் அழைத்து சென்றார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கரட்டாம்பட்டி திண்ணனூர் இடையே ராகவேந்திரா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திண்ணனூரைச் சேர்ந்த அமர்நாத் (19) என்பவர் ராஜசேகரனின் மோட்டார் சைக்கிளில் மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த புகழ்ஹர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ராஜசேகர் காயம் இன்றி தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story