உப்பிலியபுரம்: விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் தாய், குழந்தை சாவு

உப்பிலியபுரம்: விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் தாய், குழந்தை சாவு
X
உப்பிலியபுரம் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி செய்தார். இதில் 7 வயது சிறுமி இறந்தாள்.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 36). இவரது கணவர் விஜயகுமார் கடந்த 6 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். மன வளர்ச்சி குறைபாடுள்ள லிகிதா (7), லித்தீஸ் ஆகிய 2 குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்த மகாலட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி, குழந்தைகள் இருவருக்கும் அரளிவிதையை அரைத்து கொடுத்து தானும் குடித்தார். வீட்டில் வாயில் நுரை தள்ளியப்படி கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி லிகிதா நேற்று இறந்தார். மகாலட்சுமி, லித்தீஸ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!