பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடியவர் கைது

பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடியவர் கைது
X
துறையூர் பன்றிப்பண்ணை உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரில் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சந்தோஷ். பன்றிப்பண்ணை உரிமையாளரான இவர் கடந்த மாதம் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி அவரது வீட்டில் இருந்து ரூ.5 1/2 லட்சம் மற்றும் 13 பவுன் நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது பற்றி சந்தோஷ் கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் தனிப்படை அமைத்து முசிறிதுணை சூப்பிரண்டு அருள்மணி தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று துறையூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற மர்மநபரை துறையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறினார். இதையடுத்து அவரிடம்போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தர்மா என்ற தர்மன்(வயது 29) என்பதும், நெசவாளர் காலனியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது. பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!