துறையூர் அருகே ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

துறையூர் அருகே  ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
X
துறையூர் அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையன், 
துறையூர் அருகே உப்பிலியபுரம் கோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் பிரகாஷ் (21). கடந்த ஜீன் 21-ம் தேதியன்று, வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில், உப்பிலியபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு , மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பியின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பிரகாஷை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!