துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம்
துறையூர் அருகே மலை மீது உள்ள பெருமாள் கோவில் (கோப்பு படம்).
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், 3 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது பெருமாள் மலை. இங்கு அடிவா ரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல, சுமார் 1564 படிகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு வாகன த்திலும் செல்லலாம். அதற் காக 5 கி.மீ. தொலைவுக்கு தார்ச்சாலையும் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பிரசன்ன வேங்கடாசலபதி திருக்காட்சி தருகிறார்.இது 11-ம் நூற்றாண்டு கோவில் ஆகும்.
கரிகாற் சோழனின் பேரனின் ஆட்சிக் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக விவரிக்கிறது ஸ்தல வரலாறு. இங்கே உள்ள ஏழு கருங் கல் தூண்கள் விசேஷமா னவை. ஏழு தூண்களில் இருந்தும் ஏழு ஸ்வரங்களும் வெளிப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பதினாறு திருக்கரங்களுடன் இரணி யனை மடியில் கிடத்தியபடி வடக்கு முகம் கொண்டு ஸ்ரீநரசிம்மர் உக்கிரத்துடன் சேவை சாதி க்கும் சிற்பமும் கொள்ளை அழகு.
புரட்டாசி மாதத்தில், பெருமாள் மலை பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசித்தால், மகா புண்ணியம் என்றும் இந்த மாதத்தில் என்றேனும் ஒருநாளில், பெருமாளை கண் குளிர தரிசித்து மனதார வேண்டி க்கொண்டால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். வைஷ்ணவக் கோயில்களில் இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கோயிலுக்கு உண்டு.
அழகும் கருணையும் ததும்ப அற்புதக் கோலத்தில் காட்சி தரும் இந்த பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை கும்பாபிஷேகம் நடை பெற வில்லை. இது பக்தர்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறும்போது, வழக்கமாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால், இக்கோவிலில் 17 ஆண்டுக ளுக்கு மேலாகியும் கும்பாபி ஷேகம் நடத்தப்பட வில்லை. திருப்பணிகள் நடைபெறாததால் கோவில் வெளிப்பிரகார தெற்கு பகுதி சுற்றுச் சுவரில் செடிகள் முளைத்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் இந்த கோவிலின் கும்பா பிஷேகத்தை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் வேணு கோபாலிடம் கேட்ட போது, தற்போது கோவிலில் புரட்டாசி விழா நடைபெற்று வருகிறது. விழா முடிவ டைந்த உடன் கும்பாபி ஷேகத்திற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கி விடும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu