உப்பிலியபுரம் அருகே நோய் கொடுமையால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

உப்பிலியபுரம் அருகே நோய் கொடுமையால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட கவுதம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே குடல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கவுதம் (வயது 21). பட்டதாரியான இவர் குடல் நோய் பிரச்சினையால் அவதிபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் எலி பேஸ்ட்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுதம் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!