சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: நேரில் அழைத்து பாராட்டிய ஐஜி

சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: நேரில் அழைத்து பாராட்டிய ஐஜி
X
காணாமல் போன சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

கடந்த 25 தேதி துறையூர் பேருந்து நிலையத்தில், நாமக்கல் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் துறையூரிலிருந்து சமயபுரம் கோவிலுக்கு சென்று திரும்பும்போது, துறையூர் பேருந்து நிலையத்தில் கவனக்குறைவால் சிறுவனை தவறவிட்டனர். மேலும் பெற்றோர் இல்லாமல் சிறுவன் மட்டும் நிற்பதைக் கண்ட சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

மகனைக் காணாமல் தவித்த பெற்றோரும் துறையூர் நிலையத்தில் தகவல் அளித்தனர். உடனடியாக சிறுவனைப் பாதுகாப்பாக மீட்ட போலீசார், தந்தை பெரியசாமியிடம் சிறுவன் வெற்றிவேலை ஒப்படைத்தனர். இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது. இதனை அறிந்த காணாமல் போன சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்ற்றோரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்., சிறுவனைப் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த, துறையூர் போக்குவரத்து காவலர் கார்த்திக், குழந்தைகள் பாதுகாப்பு இயக்க பெண் போலீசார் மகாலட்சுமி, நீலாவதி ஆகிய 3 பேரையும் நேரில் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களைப் பாராட்டி வெகுமதி அளித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். மேலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்திடுமாறு கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!