/* */

துறையூரில் 25-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் 25-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

துறையூரில்  25-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகவோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 25.06.2022-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர்அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பொதுமக்கள் பயனடையுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 21 Jun 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்