அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
X

கண்ணனூர் அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

துறையூர் அடுத்த கண்ணனூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசு. பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கீதா, பள்ளி ஆசிரியர்கள் கவிதா, செந்தாமரை, சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பள்ளி மாணவ , மாணவிகள் சுமார் 170 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. கண் பரிசோதகர் கார்த்திகா கலந்து கொண்டு பரிசோதனை செய்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் அழகேசன் செய்திருந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!